குட்டை நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு; திருப்பூரில் சாேக சம்பவம்

திருப்பூரில் குட்டை ஒன்றின் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-31 15:14 GMT

பைல் படம்.

திருப்பூர், விஜயாபுரம் அருகே மகாகாளியம்மன் கோவில்யை சேர்ந்தவர் தினகரன். இவர் பிரிண்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மகன் சரண்,13, வித்யாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், விஜயாபுரம் பகுதி குட்டையில் இன்று சரண் குளிக்க சென்றான். அப்போது, சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால், ஆழமான பகுதிக்கு செல்லவே நீரில் மூழ்கி பலியானான்.

இதனையட்து தகவலறிந்து அங்கு விரைந்த நல்லூர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News