திருப்பூர் மாவட்டத்தில் 1100 மி.மீ. மழைப்பதிவு - குண்டடத்தில் 200 மி.மீ.

திருப்பூரில், நேற்று பல மணி நேரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டடத்தில் 200 மி.மீ. மழை பதிவாகியது.

Update: 2021-11-18 09:30 GMT

கோப்பு படம் 

திருப்பூர் மாநகரம், புற நகர் பகுதிகள், அவினாசி, தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. திருப்பூர் நகரில் மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி, சில இடங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்தது.

புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்த நிலையில், அதிகபட்சமாக, குண்டடத்தில் 200 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் வருமாறு - அளவு மி.மீ.

குண்டடம்- 200,

தாராபுரம்-132,

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் -110,

திருப்பூர் தெற்கு -108,

பல்லடம்-84,

திருப்பூர் வடக்கு -73,

அவினாசி-70,

திருமூர்த்தி அணை-41,

மடத்துக்குளம் -46,

உடுமலை- 40,

அமராவதி அணை-38,

காங்கேயம்-5.60,

மாவட்டம் முழுவதும் மொத்தம்-1100 மில்லி மீட்டர் மழை பதிவானது

Tags:    

Similar News