வெளிமாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் ஜங்ஷனில் தடுப்பூசி முகாம்
திருப்பூர் ஜங்ஷனில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.;
தமிழகத்தில் 2 வது அலை நிறைவு பெறும் நிலையில், 3 வது அலை இம்மாதம் இறுதியில் அதிகரிக்கும் என உலக சுகாதார நிலையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த சூழ்நிலையில் கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் திடீரென தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வருவதாக தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ஜங்ஷனில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கப்பட்டுள்ளது. முகாமை கமிஷனர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.