திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு
திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.;
திருப்பூர் அருகே நல்லிகவுண்டர் நகரில் விசுவேசுவர ஸ்வாமி, விசாலாட்சியம்மன் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலுக்கு 148 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ளது.இந்நிலையில் திருப்பூர் இணை ஆணையாளர் நடராஜ், செயல் அலுவலர் செல்வம் மற்றும் வருவாய் துறையினர், போலீஸார் ஆகியோர் சென்று, தனிநபரிடம் இருந்து 15 கோடி மதிப்பிலான 1.67 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டது.