முள் புதரில் ரத்தக் கரைகளுடன் குழந்தை மீட்பு; திருப்பூரில் பரிதாபம்

திருப்பூரில் முள்புதரில் ரத்த கரையுடன் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-29 07:41 GMT

குழந்தை மீட்கப்பட்ட முள்புதர்.

திருப்பூர் குமரானந்தபுரம் சிவன் தியேட்டர் பின் பகுதியில் உள்ள முள்புதரில், இன்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்பகுதி மக்கள் முள்புதர் அருகே சென்றபோது, பிறந்த குழந்தை ரத்தகரையுடன் துணியில் சுற்றி யாரோ முள் புதரில் வீசி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தெற்கு போலீஸார் மற்றும் அரசுமருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குழந்தைகள் ஆம்புலன்சுடன் வந்த செவிலியர்கள், குழந்தையை மீட்டு பரிசோதித்தனர்.

அப்போது, குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News