திருப்பூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த பங்களாதேஷ் இளைஞர்கள் 3 பேர் கைது
திருப்பூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த பங்களாதேஷ் இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருப்பூர் மாநகரில் தொழில் நிறைந்த உள்ளதால் பல்வேறு மாநிலங்கள், நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குமாரந்தபுரத்தில் போலீஸார் ரோந்து சென்றபோது, சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து வடக்கு போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் உரிய ஆவணமின்றி தங்கி வேலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அல்மீன்,28, ரோகினியா,22, மோனி,21, ஆகிய மூவரையும் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 3 நாட்களுகளுக்கு முன் 15 வேலம்பாளையம் பகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 3 பங்களாதேஷனரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.