இலவச பட்டா புரளியால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
இலவச பட்டாவுக்கு மனு பெறப்படுவதாக கிளம்பிய புரளியால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க பொதுமக்கல் திரண்டதால் பரபரப்பு நிலவியது.;
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிரதிவாரம் திங்கட்கிழமை, பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு, முதியோர் உதவித்தொகை, விதைத்தொகை, கல்வி கடன், இலவச பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள், பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து தங்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையில், இலவச பட்டா வழங்கப்பட உள்ளதாக, புரளி கிளம்பியது.
இதை கேள்விப்பட்டு, இலவச பட்டா கேட்டு ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனால் நீண்ட வரிசையில் பொதுமக்கல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கலெக்டர் வினீத் மனுக்களை வாங்கினார். நீண்ட கியூ வரிசையில், சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரண்டதால், கொரோனா பரவல் அபாயம் உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.