திருப்பூருக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை; தயார் நிலையில் தீயணைப்பு துறையினர்

திருப்பூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் காரணமாக தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.;

Update: 2021-08-22 12:49 GMT

தயார் நிலையில் உள்ள தீயணைப்பு வீரர்கள்.

திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆக.,29 முதல் 31 ம் தேதி வரை 3 நாட்களுக்கு அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதீத மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால், தடுப்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு முன் எச்சரிக்கையாக பள்ளிகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News