திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கூலி உயர்வு கோரி, திருப்பூரில் பவர்டேபிள் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்,

Update: 2021-07-28 11:40 GMT

பவர்டேபிள் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால், திருப்பூரில் வெறிச்சோடி காணப்படும் சிங்கர் டேபிள் மிஷின்கள்.

திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பவர் டேபிள் தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் பவர் டேபிள் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் துவங்கி உள்ளது.

இது குறித்து சங்க தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால் ஆகியோர் கூறியதாவது: பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு கடந்த 2016 ல் போடப்பட்ட ஒப்பந்தம் 2020ல் முடிவடைந்தது. தற்போது ஊதிய உயர்வு, நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக சைமா சங்கத்திடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தோம். அதற்கு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை முடிவுக்கு பிறகு, கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்க முடியும் என பதிலளித்து உள்ளனர். இதனால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். போராட்டம் காரணமாக, தினசரி 3 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

Tags:    

Similar News