திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வேலை வாய்ப்பு அலுவலக பதிவைக் கடந்த 2017,2018,2019ம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பிததல் சலுகையை தமிழக அரசு வழங்கி உள்ளது.
இந்த சலுகை பெற விரும்பும் பதிவுதாரர்கள் மூன்று மாதத்துக்குள் 27–08–2021 க்குள் இணையதளம் மூலமாக புதுப்பித்துக்கொள்ளலாம். இணையதளம் மூலமாக புதுப்பிக்க இயலாதவர்கள் திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்து கொள்ளலாம். இணைய தளம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவுதாரர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.