திருப்பூரில் மேம்பாலத்தில் சிந்திய ஆயில்: மண் நிரப்பி சரி செய்த போலீஸார்

திருப்பூரில் மேம்பாலத்தில் சிந்திய ஆயில், மண் நிரப்பி போலீஸார் சரி செய்தனர்.

Update: 2021-08-03 11:52 GMT

திருப்பூரில் மேம்பாலத்தில் சிந்திய ஆயில் மீது மண் கொட்டி சரி செய்யும் போலீஸார்.

திருப்பூர் புஷ்பா கார்னரில் இருந்து டவுன் ஹால் செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் வழியாக சென்ற வாகனம் ஒன்று, அதிகளவில் ஆயில் சிந்தி விட்டு சென்றது. ஆயிலால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் போலீஸார், அங்கு சென்று ஆயில் மீது மண்ணை கொட்டி, வழுக்காமல் இருக்குமாறு சரி செய்தனர். இதனால் விபத்தில் இருந்து வாகனங்கள் தப்பியது. மேலும், போலீஸாரின் இந்த செயலுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.

Tags:    

Similar News