திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஆர்வம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2021-07-13 14:12 GMT

பள்ளி மாணவர்களின் கோப்பு படம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்றும் வகையில் இணையதளங்களின் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமும் வகுப்பு நடத்தப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில் முடங்கியதால் வருமானமின்றி பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 1403, அரசு மற்றும் உதவிபெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் 1 ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் எல்கேஜி முதல் ப்ளஸ் 2 வரையில் இதுவரை 39 ஆயிரம் மாணவிர்கள் புதிதாக சேர்ந்து உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News