திருப்பூரில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

திருப்பூரில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2021-09-01 12:41 GMT

திருப்பூர் கொங்கு நகரில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

திருப்பூரில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் திருப்பூரில் இன்று திடீரென ஒரு மணி நேரமாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் கொங்கு நகரில் மழை நீருடன், கழிவு நீர் சேர்ந்து ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் தண்ணீர் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். தாழ்வான வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.எனவே கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

Similar News