தொழிலாளர் நல சட்டங்களை அனைத்து பஞ்சாலைகளிலும் அரசு அமல்படுத்த வேண்டும்

பஞ்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ பிடித்தம் செய்ய வேண்டும்;

Update: 2021-08-22 12:22 GMT

திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஏஐடியூசி மில் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு

பஞ்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ பிடித்தம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட மில் தொழிலாளர் சங்க ஏஐடியூசி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது  

திருப்பூர் மாவட்ட மில் தொழிலாளர் சங்கம் ஏஐடியூசி மாவட்ட மாநாடு ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில்  மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.  மாநாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சாலைகளில் வேலை செய்யும் அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதாவது, நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் குறையாமல் சம்பளம் வழங்க வேண்டும்.

பஞ்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை அனைத்து பஞ்சாலைகளிலும் அரசு அமல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் மாதம் 3000 ரூபாய், என பி.எப்., நிர்வாகம் மூலம் பென்சன் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளில் பணிபுரிந்து வந்த அனைவருக்கும் கடந்த 2011 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் சவுந்தரராஜன், பொருளாளர் நடராஜன் மற்றும் மில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News