திருப்பூரில் தெருவோர கடைகளுக்கு அபராதம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் 20 தெருவோர கடைகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி தெருவோரக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் 33 இடங்களில் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், காதர்பேட்டை பகுதியில் தெருவோர கடைகள் அமைத்து சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அங்கு சென்று, தடையை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தனர்.