திருப்பூர்: காணொலி மூலம் நாளை விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்
திருப்பூரில் வீடியோ கான்பரன்ஸ் மூலம், நாளை விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூர் மாவட்டத்தில், விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தேசிய தகவலியல் மைய தொழில் நுட்ப உதவியுடன், நாளை சனிக்கிழமை, மதியம் 2.30, மணி முதல் 4.30, மணிவரை வீடியோ கான்பரஸ் வாயிலாக, விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்ட்டத்தில், வட்டார வேளாண்மை இயக்குனர், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் இருந்து, விவசாயிகள் காணொலி மூலமாக கலெக்டரை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். தேவைகளை, கூடுதல் தகவல்களை விவசாயிகள் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்து உள்ளார்.