திருப்பூரில் இஎஸ்ஐ., மருத்துவமனை: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பாஜக
திருப்பூரில் இஎஸ்ஐ., மருத்துவமனை கட்டட பணிகள் தொடங்கிய மத்திய அரசுக்கு திருப்பூர் பாஜக., சார்பில் நன்றி தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியதாவது:
பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் திருப்பூரில் தரமான மருத்துவமனை இல்லாமல் பல தொழிலாளர்கள் மருத்துவ வசதி இன்றி உயிர் இழந்து வருவதை அறிந்து பிரதமர் 2019 ஆண்டு பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ESI மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி சென்றார். ஆனால் சில வழக்குகள் காரணமாக மாநில அரசின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனிடம் நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து முறையிட்டோம். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசியதன் விளைவு வருகின்ற 12-ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் இத்திட்டத்தை திருப்பூருக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய இணை அமைச்சர் முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் , தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், திருப்பூர் மாவட்ட தொழிலாளர்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.