திருப்பூரில் 3871 பேருக்கு தபால் ஓட்டு
திருப்பூரில் வாக்கு செலுத்த வர முடியாதவர்களுக்கான தபால் ஓட்டு 3871 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று 3,871 பேருக்கு தபால் ஓட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் ஆணையம் பாதுகாப்புடன்,சமூக இடைவெளி கடை பிடித்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதன்படி, 1,050 வாக்காளருக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு தனி வாக்குச்சாவடிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் வசதிக்காக, தபால் ஓட்டு வழங்கப்படுகிறது. கொரோனா பாதித்தவர்களும் தபால் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில், 3,871 பேருக்கு தபால் ஓட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலையில் 771, அவிநாசியில் 661, தாராபுரத்தில் 657, மடத்துக்குளம் - 603, பல்லடத்தில் - 398, காங்கயம் - 335, திருப்பூர் தெற்கு - 280, திருப்பூர் வடக்கு - 166 என்று மொத்தம் 3,871 தபால் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 29 ம் தேதி அன்றும் 31ம் தேதியன்றும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர், போலீசார், வீடியோ எடுப்பவர்கள் ஆகியோர் தொகுதியில் உள்ள தபால் வாக்குள்ள வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுப்பதிவு நடத்தப்படவுள்ளது.