திருப்பூரில் 22 முக்கிய கோவில்களில் 3 நாட்கள் தரிசனம் ரத்து
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 முக்கிய கோவில்களில் ஆடி 18 உள்பட 3 நாட்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 22 கோவில்களில் 3 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கோவில்களில் ஆக.,2 ம் தேதி, 3 ம் தேதி மற்றும் 8 ம் தேதி ஆகிய நாட்களில் சாமி ரத்து செய்யப்படுகிறது.
இதில், பல்லடம் வட்டம் அய்யம்பாளையம் வாழைத்தோட்டது அய்யன் கோவில், காங்கேயம் சிவன்மலை, அவிநாசி நகர் அவினாசி லிங்கேஸ்வரர், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில், முத்தூர் அத்தனூரம்மன், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி வீரராகவப்பெருமாள் கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில் உள்பட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மடத்துக்குளம் அருகே கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஆக.,2 ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.