திருப்பூரில் மாவட்டத்தில் 11.23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர் மாவட்ட்டதில் 11 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.;

Update: 2021-08-29 13:11 GMT
பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் முதல் டோஸ் 9 லட்சத்து 47 ஆயிரத்து 830 பேரும், 1 லட்சத்து 75 ஆயிரத்து 146 பேரும் செலுத்தியுள்ளனர். 5 லட்சத்து 80 ஆயிரத்து 181 ஆண்களுக்கும், 5 லட்சத்து 42 ஆயிரத்து 603 பெண்களும், கோவிஷீல்டு 9 லட்சத்து 95 ஆயிரத்து 121, கோவேக்சின் 1 லட்சத்து 25 ஆயிரத்து 836 பேருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மேலும், 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 183 பேரும், 45 வயது முதல் 60 வயது வரையுடையவர்கள் 3 லட்சத்து 23 ஆயிரத்து 305 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 488 பேர் என மொத்தம் 11 லட்சத்து 22 ஆயிரத்து 976 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News