திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள்: தேசிய மருத்துவ குழு ஆய்வு
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தேசிய மருத்துவ ஆணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.;
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 11.28 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.336.96 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணி நடக்கிறது. இதில், மத்திய அரசின் சார்பில் 195 கோடி ரூபாய், மாநில அரசு மார்பில் 141.96 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ கல்லூரிக்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்லூரிக்கான அங்கீகார சான்று வழங்குவதற்காக, தேசிய மருத்துவ ஆணைக்குழுவை சேர்ந்த ராஜஸ்தான் மாநிலம், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். கட்டுமான பணிகள் எவ்வாறு உள்ளது. போதிய இடவசதி உள்ளதா போன்ற தகவல்களை கேட்டறிந்தனர். ஆய்வின்போது மருத்துவ கல்லூரி டாக்டர் உடனிருந்தனர்.