திருப்பூரில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து ஒப்படைப்பு: கமிஷ் னர்

திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமிஷ்னர் வனிதா தகவல்.

Update: 2021-08-21 11:47 GMT

திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர கமிஷனர் வனிதா, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

திருப்பூர் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்கில், கண்டுபிடிக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர கமிஷ்னர் வனிதா கலந்து கொண்டு, கண்டுபிடிக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் கூறுகையில், திருப்பூர் மாநகர பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டுமுதல் 2021 ம் ஆண்டு வரையில் இதுவரை 2371 காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்,2155 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நடப்பு மாதம் வரையில் 94 பேர் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 71 பேர் கண்டுபிடிக்கப்பட்டுளளனர் என்றார். சிறப்பாக செயல்பட்டபோலீஸாருக்கு கமிஷனர் வனிதா நினைவு பரிசு வழங்கினார்.


Tags:    

Similar News