திருப்பூரில் அரசு சார்பில் சுதந்திர தின அமுத பெருவிழா 27ல் தொடக்கம்

திருப்பூரில், வரும் 27-ஆம் தேதி, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி தொடங்குகிறது.

Update: 2022-03-23 02:15 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், கலெக்டர் வினீத் பேசியதாவது: சுதந்திர திருநாள் அமுத பெருவிழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் மணிவேல் திருமண மண்டபத்தில், வருகிற 27ம் தேதி முதல், அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இதனை தொடங்கிவைத்து அரசு நலத்திட்டங்கைள வழங்குகின்றனர்.

செய்திமக்கள் தொடர்புதுறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இதுதவிர, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஒரு வாரமும் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றார். 

Tags:    

Similar News