நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் மனு
நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், வெள்ளக்கோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் நூறு நாள் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். பல்லடம் சிட்டாம்பாளையம் பகுதியில் நூறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்பதால், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி 20 க்கும் மேற்பட்ட நூறு நாள் திட்ட பெண் தொழிலாளர்கள் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் நடந்த மனு நீதிமுகாமில் மனு அளித்தனர். மனுவில், சிட்டாம்பாளையம் பகுதியில் நூறு நாள் திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து வருகிறோம். கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. பண்டிகை காலம் என்பதால் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.