திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 4 பேர் காயம்
திருப்பூரில், கட்டுமானப்பணியின் போது சுவர் இடிந்து விழுந்து வட மாநிலத் தொழிலாளர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.;
திருப்பூர் வளர்மதி பஸ் ஸ்டாப் அருகே, தனியார் கடை கட்டுமானப்பணியில், பீகார் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமானப் பணியின் போது, கட்டப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ்,46, பங்கஷ்குமார்,19 ,சின்னசாமி,35 அகிலேஷ்குமார்,20, ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.