திருப்பூரில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோதனை

திருப்பூரில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Update: 2022-01-31 12:45 GMT

திருப்பூரில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

வாக்காளர்களை கவரும் வகையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலிலைமுன்னிட்டு திருப்பூர் மாநகர பகுதியில் 12 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு பறக்கும் படையில் ஒரு அலுவலர், ஒரு போலீஸார், ஒரு வீடியோக ஒளிப்பதிவாளர் மற்றும் டிரைவர் என 4 பேர் இருப்பர். 24 மணி நேரமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டல பகுதிகளில் இரவு, பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News