கொடிகாத்த குமரனுக்கு திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நினைவஞ்சலி
திருப்பூர் குமரனின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் பாஜக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் 90ஆவது நினைவு நாள், ரயில்வே ஸ்டேஷன் அருகே அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், ஓபிசி அணியின் சார்பில் அவருடைய திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓபிசி மாவட்ட பொதுச்செயலாளர் நந்தகுமார், தீபா மோகன்ராஜ், ராயபுரம் மண்டல் தலைவர் மூர்த்தி, ஓபிசி நல்லூர் மண்டல் தலைவர் தங்கராஜ் மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.