திருப்பூர் மாநகரில் 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
திருப்பூர் மாநகரில் மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் 5 பேர் இடமாற்றம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டு உள்ளார்.;
திருப்பூர் மாநகர தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பத்ருன்னிசா பேகம் சைபர் கிரைம் பிரிவுக்கும், வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கீதா, சிறப்பு புலனாய்வு பிரிவுக்கும், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ஆன்ந்த், வீரப்பாண்டி இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். அதேபோல் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மாநகர கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராகவும், கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டராக இருந்த ரத்தினகுமார், தெற்கு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.