இருசக்கர வாகனத்தில் புகையிலை கடத்தியவர் கைது
சோதனையில் இருசக்கர வாகனத்தில் 37 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.;
திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் பூலுவபட்டி பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனத்தில் 37 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை கடத்திய அவினாசி அடுத்த நடுவச்சேரி பகுதியை சேர்ந்த கமலகண்ணன்,36 என்பவரை போலீஸார் கைது செய்தனர்.