திருப்பூர் மாநகராட்சி தேர்தல்: 8 இடங்களில் மனுத்தாக்கல் தொடக்கம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் மாநகராட்சியில், 8 இடங்களில் மனுத்தாக்கல் நடைபெறுகிறது.

Update: 2022-01-28 12:42 GMT

கோப்பு படம் 

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்து உள்ளன. வார்டு கவுன்சிலர்களுக்கான மனு தாக்கல் இன்று தொடங்கியது. மாநகராட்சி 1 வது மண்டலத்திற்கு வார்டு 1,9,10,11,12,13,14,15, ஆகியவற்றுக்கு உதவி ஆணையாளர் அறையில், உதவி தேர்தல் அதிகாரி சுப்பிரமணியத்திடமும், வார்டு 21,22,23,24,25,26,27 ஆகியவற்றுக்கு உதவி தேர்தல் அலுவலர் முனியாண்டி ஆகியோர் மனுக்கள் பெறுகின்றனர்.

அதேபோல், வார்டு 2,3,4,5,6,7,8 ஆகியவற்றுக்கு, உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், வார்டு 16,17,18,19,20,30,31,32 ஆகியவற்றுக்கு உதவி தேர்தல் அலுவலர் ஹரி ஆகியோர் மனுக்கள் பெறுகின்றனர். வார்டு 33,34,44,45,50,51 ஆகியவற்றுக்கு, உதவி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியம், வார்டு 46,47,48,49,56,58,59,60 ஆகியவற்றுக்கு உதவி தேர்தல் அலுவலர் ஹரி, வார்டு 28,29,36,37,42,43,52,55 ஆகியவற்றுக்கு உதவி தேர்தல் அலுவலர் ராம்மோகன், வார்டு 38,39,40,41,53,54,57 ஆகிய வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர் செல்வநாயகம் ஆகியோர் மனுக்கள் பெறுகின்றனர்.

Tags:    

Similar News