வரும் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி விழா: திருப்பூரில் நிர்வாகிகள் ஆலோசனை

தேவர் ஜெயந்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் இன்று நடந்தது.

Update: 2021-10-09 10:39 GMT

தேவர் பேரவை சார்பில் திருப்பூர் உள்ள அலுவலகத்தில் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்ட தேவர் பேரவை சார்பில் ஆண்டு தோறும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையொட்டி, தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு வருகிற 30 ம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட தேவர் பேரவை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகன், பொது செயலாளர் அகஸ்தியன், செயலாளர் ஜெய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வருகிற 30 ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை திருப்பூர் சுற்று வட்டாரத்தில் சிறப்பாக கொண்டாடுவது, உடுமலை சைனிக் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டியதை பாராட்டுவதுடன், நன்றி தெரிவித்து கொள்வது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் செந்தில், இணை செயலாளர் தம்பு ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News