திருட்டை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், திருட்டு சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-10-16 12:45 GMT

திருப்பூர் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம்.

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூர் ஜவுளி மார்க்கெட்டில் ஜவுளி வாங்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் வருகை தருகின்றனர். பண்டிகை காலம் நெருங்க நெருங்க கடை வீதி மற்றும் ஜவுளிக்கடைகளில் ஆடை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதும். இதன் காரணமாக மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகை நவ.,4 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நெருங்கியதை தொடர்ந்து, திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

Similar News