திருப்பூரில் 131 பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் பதற்றமான 131 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்கும் பணியை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-17 13:20 GMT

திருப்பூர் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை தேர்தல் அலுவலர் வினீத் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும்19ம் தேதி நடக்கிறது. அரசியல் கட்சியினர் இன்று பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 776 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், 131 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இப்பணியை தேர்தல் தேர்தல் அலுவலர் வினீத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சியில் தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி விளக்கிறார்.

Tags:    

Similar News