திருப்பூர் அரசுப்பள்ளியில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: போலீசார் விசாரணை

திருப்பூர் அரசுப்பள்ளியில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-07 13:35 GMT

பைல் படம்.

திருப்பூர் ராயபுரத்தில் ஜெய்வாய் பாய் மாநகராட்சி அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிகிறது. இந்த அரசுப்பள்ளியில் நூற்றுக்கணக்கான பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளியில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் யாரோ வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

பள்ளி காவலர் இன்று வந்து பார்த்தபோது, சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு காவலர் தகவல் தெரிவித்தார். பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர். 

Tags:    

Similar News