போனஸ் வழங்க கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு போனஸ், 2 மாத நிலுவை சம்பளம் வழங்ககோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் 2000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலும், தூய்மை பணியாளர்களுக்கு 2,500 போனஸ் வழங்க வேண்டும். 2 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்களின் கூட்டு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.