100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு செய்தனர்

Update: 2022-02-09 12:20 GMT

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி அணி வகுப்பு நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி போலீஸாரின் அணிவகுப்பு நடந்தது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19 ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் அமைந்து உள்ளன. தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், திருப்பூர் மாநகர போலீஸார் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி போலீஸாரின் அணிவகுப்பு நடந்தது. அணி வகுப்பு நிகழ்ச்சி உதவி கமிஷனர் அனில்குமார் தலைமை வகித்தார். அவிநாசி ரோடு, பெரியார் காலனி உள்ளிட்ட இடங்களில் அணி வகுப்பு நடந்தது. அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ராஜேஸ்வரி, கந்தசாமி உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News