திருப்பூரில் 5ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆலாேசனை

திருப்பூர் மாநகராட்சியில் மெகா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2021-10-08 13:27 GMT

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த சில நாட்களாக கோவாக்சின் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்.,10 ம் தேதி 5 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

மெகா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News