திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் நாதஸ்வரம் தவில் வாசித்து கோரிக்கை மனு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வந்து, நாதஸ்வரம் தவில் வாசித்தப்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாதஸ்வரம், தவில் வாசித்தப்படி நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்கள் நலச் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், கடந்த ஒன்னறை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம் , சீர் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டு உள்ளன. இதனால் இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இசைக்கலைஞர்களுக்கு கருவிகள் வழங்க வேண்டும். முதியோர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.