தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களின் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம்: கலெக்டர்
கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊசி செலுத்தாமல் வெளியில் சுற்ற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறையின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்த பணியாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றினால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என வழிவகை உள்ளது. எனவே, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள், என தெரிவித்து உள்ளார்.