திருப்பூர் கலெக்டர் ஆபீசில் மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார்
சொத்து மோசடி செய்து விட்டதாக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மகன், மருமகள் மீது வயதான தம்பதி புகார் அளித்தனர்.;
மகன், மருமகள் மீது புகார் தெரிவித்த வயதான தம்பதியினர்.
திருப்பூர் அவிநாசி ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி - பூவாத்ததாள். இவர்கள் வாரிசுகள் துரைசாமி, வசந்தாமணி. இருவருக்கும் திருமணமாகி விட்டது. தேவூர் கூட்டப்பள்ளி அருகே சுப்பிரமணிக்கு சொந்தமாக 2 ஏக்கர் உள்ளது. இந்த நிலம், தனக்கு பிறகு ஒரு ஏக்கர் மகனுக்கும், ஒரு ஏக்கர் மகளுக்கும் என பிரித்து எழுதி வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன் துரைசாமி, தனது மனைவி கல்பனா மற்றும் மைத்துனருடன் சேர்ந்து பெற்றோர் 10 லட்சம் கடன் வாங்கியதாக கூறி, மிரட்டுவதாக, கலெக்டர் ஆபீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.