திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற்றது.;
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் மாதம் ரூ.1000 வழங்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டு தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. நடப்பாண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு இன்று திருப்பூர் ஜெய்வாய்ப்பள்ளியில் நடைெது.
திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில், மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். படிப்பறிவு திறன் தேர்வு பகுதியில் 100 மதிப்பெண்களும், மனத்திறன் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடந்தது. இத்தேர்வில் வெற்றிப்பெறும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.