திருப்பூரில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவது குறித்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்பட்டது;

Update: 2022-01-09 15:20 GMT

திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவது குறித்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று கண்காணித்தபோது, சத்யா நகரில் அனுமதியின்றி  செயல்பட்ட மாட்டு இறைச்சி  கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் தாராபுரம் ரோட்டில் செயல்பட்ட மளிகை கடைக்கு, மாநகராட்சி 4வது மண்டலப்பகுதியில் விதிமுறை மீறி செயல்பட் நான்கு இறைச்சி கடைகளுக்கு தலா ரூ.500 அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர்.


Tags:    

Similar News