உள்ளாட்சி தேர்தல்: திருப்பூரில் அதிமுகவினர் விருப்ப மனு
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனு கொடுத்தனர்.;
உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் நவ.,29 ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என கட்சி மேலிடம் அறிவித்தது. அதன்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுக்களை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார். விருப்ப மனுக்களை திருப்பூர் மாநகர வடக்கு, தெற்கு, காங்கயம் பகுதி நிர்வாகிகள் பலர் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.