சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை

திருப்பூரில் குடும்ப தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-28 13:09 GMT

விருதுநகர் மாவட்டம் தீர்த்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்து,40. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள், திருப்பூர் கவிதா நகரில் வசிக்கின்றனர். கணவன், மனைவி இடையே  ஏற்பட்ட தகராறு காரணமாக ரம்யா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் முத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News