உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருப்பூரில் பாஜகவினருக்கு நேர்காணல்

திருப்பூரில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்துள்ளவர்களிடம் பாஜக நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.;

Update: 2022-01-29 10:45 GMT

திருப்பூர் மாவட்டத்தில்,  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்த பாஜகவினரிடம் நேர்காணல்,  கட்சி அலுவலகத்தில் நடந்தது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, தேர்தல் பொறுப்பாளர்களான மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், கதிர்வேல் மாவட்ட பொருளாளர் குணசேகர் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த 400 க்கும் மேற்பட்டவகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News