திருப்பூர் மாநகராட்சியில் நவ.1ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

திருப்பூர் மாநகராட்சியில் நவ.1 ஆம் தேதி மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2021-10-28 13:00 GMT

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் நவ.,1 ம் தேதி மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடக்கிறது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி,  மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி 1 வது வார்டு முதல் முதல், 15 வது வார்டுகளில் வசிக்கும் மக்கள் 1 வது மண்டல அலுவலகத்திலும், 16 வார்டு முதல் 30 வார்டுகளில் வசிக்கும் பொது மக்கள் நஞ்சப்பா நகரில் உள்ள 2 வது மண்டல அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

அதேபோல், , 31 வது வார்டு முதல் 45 வது வார்டுகளில் வசிக்கும் பொது மக்கள் 3 வது மண்டல அலுவலகத்திலும், 46 வது வார்டு முதல் 60 வார்டுகளில் வசிக்கும் 4 வது மண்டல அலுவலகத்திலும், நவம்பர் 1 ம் தேதி காலை 10 மணி முதல், 1 மணி வரை நடைபெறும்  குறைத்தீர்க்கும் முகாமில் பொது தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News