கலப்பட டீத்தூள் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
திருப்பூரில் கலப்பட டீத்தூள் விற்பனை குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.
திருப்பூரில் கலப்பட டீத்தூள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் உள்ளிட்ட இடங்களில் 16 கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் 2 கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து பகுப்பாய்க்கு டீதூள் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், நடந்த சோதனையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த 10 கிலோ இனிப்பு, சுகாதாரமற்ற 6 கிலோ இனிப்பு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பறிமுதல் செய்யப்பட்டு தலா 2000 அபராதம் விதிக்கப்பட்டது.