ஏற்றுமதியாளர்கள் நிலுவை தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ஏற்றுமதியாளர்கள் நிலுவை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;
ஏற்றுமதியாளர்கள் நிலுவைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஏஇபிசி தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர் சக்திவேல் வெளியிட்டு அறிக்கை: திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் நிலுவையில் உள்ள சலுகைகளான எம்இஐஎஸ், ஆர்ஓஎஸ்எல், ஆர்ஓஎஸ்சிடிஎஸ் பெறுவதற்கு விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான இணையதளம் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. 2020 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி வரைக்கான நிலுவையில் உள்ள சலுகைகளை டிஜிஎப்டி வலைதளம் மூலமாகவும், ஜனவரி 2021 முதல் பெற வேண்டிய சலுகைகளை இசிஇஜிஏடிஇ வலைதளம் மூலமாகவும் பெற வேண்டும். நிலுவை தொகை பெறுவதில் ஏதெனும் சிக்கல் இருந்தால் அதனை உடனடியாக ஏஇபிசி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.