திருப்பூரில் தேர்தல் பணியாளர்களுக்கு 2 ம் கட்ட பயிற்சி நிறைவு
திருப்பூரில் தேர்தல் பணியாளர்களுக்கு 2 ம் கட்ட பயிற்சி நிறைவு பெற்றது.;
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 776 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்களின் முன்னிலையில் நடந்தது.
வாக்குசாவடிகளில் பணியாற்ற 3,732 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்த நிலையில், இரண்டு கட்ட பயிற்சி இன்று மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நடந்தது. வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு 19 ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளன.