திருப்பூரில் டிரைவர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் மேட்டுபாளையத்தில் டிரைவர் படுகொலை தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-01-14 14:40 GMT

திருப்பூர் மேட்டுப்பாளையம் சரவணக்குமார்,27, டிரைவராக வேலை செய்து வந்தார். மேட்டுப்பாளையம் அரசு மரம் அருகே சரவக்குமார், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கொடுக்கல், வாங்கலில் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. கொலை தொடர்பாக சரணவக்குமாரின் நண்பர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News